Input your search keywords and press Enter.

பொள்ளாச்சியை உலுக்கிய பாலியல் சம்பவம்

அமைதிக்கு பெயர்போன பொள்ளாச்சி நகரம், சமீபத்திய பாலியல் கொடூர சம்பவங்களால் கதிகலங்கிப் போயுள்ளது.

என்ன நடந்தது?

பொள்ளாச்சியை சேர்ந்த 4 இளைஞர்கள், இளம் பெண்களையும், கல்லூரி மாணவிகளையும் முகநூல் மூலம் ஏமாற்றி, அவர்களைஆபாசமாக படமெடுத்ததோடு, மிரட்டி பணம் நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?

கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி போலீஸார் என்.சபரிராஜன் (25), என்.சதீஷ் (29), டி.வசந்தகுமார்என்ற 3 இளைஞர்களை கைது செய்ததோடு, அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதை தொடர்ந்து சி.பி.-சி.ஐ.டி. பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. மார்ச் 13-ஆம் தேதியன்று வழக்கு சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்டது.

மாட்டியது எப்படி?

எஃப்.ஐ.ஆர்.-இன் படி கல்லூரி மாணவியும் சபரிராஜனும் நண்பர்கள். கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி

உஞ்சவேலம்பட்டிக்கு கல்லூரி மாணவியை அழைத்த சபரிராஜன், தனது நண்பர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

பின்னர் அனைவரும் ஒரு வோல்ஸ்வேகன் காரில் சென்றுள்ளனர்.

நண்பரை நம்பிச் சென்ற மாணவிக்கு நேர்ந்தது வார்த்தைகளால் விவரிக்க முடியாத கொடூரம்.

காரில்வைத்து, மாணவியின் மேலாடையை கழற்றிய கயவர்கள், அதை மொபைல் போனில் படமெடுத்துள்ளனர். மேலும், அவரைபலவந்தப்படுத்தி, அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியையும் பறித்துள்ளனர்.

சில மணி நேரங்களில் விடுவிக்கப்பட்ட மாணவியை, மீண்டும் போனில் தொடர்பு கொண்ட இளைஞர்கள் பணம் கேட்டுமிரட்டியுள்ளனர். தொடர்ந்து மிரட்டல் வரவே, அந்த மாணவி காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து கயவர்களை கைது செய்த பிறகுதான் காமகொடூர்களின் வெறியாட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கயர்வர்களின் போன்களை ஆராய்ந்த போது, கல்லூரி மாணவி மட்டுமல்ல, பல பெண்களின் அந்தரங்க, ஆபாச படங்கள்வீடியோக்கள் இருப்பது கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்களுடன் நண்பர்கள் போல பழகி, போன் நம்பர்களை பெற்றுள்ளனர். பின்னர் நயவஞ்சகமாக தங்களது வலையில் வீழ்த்தி,ஆபாச படமெடுத்து, மிரட்டி பணம், நகைகளை வாங்கியுள்ளனர்.

பயம், குடும்ப கவுரவம் காரணமாக பல பெண்கள் புகார் அளிக்க தயங்கியதே இளைஞர்களுக்கு வசதியாகிவிட்டது.

இதனிடையே புகார் அளித்த மாணவியின் சகோதரரை ஒரு கும்பல் தாக்கியது. புகார் குறித்து விசாரணை நடத்திய கோவைஎஸ்.பி. பாண்டியராஜன், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்தார்.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு, தன் மீது எவ்வித குற்றமும் இல்லை என்றும், தான் அந்தமாணவியிடம் பேசினதில்லை எனவும் வாட்ஸ் அப் மூலம் வீடியோ ஒன்றை மார்ச் 4 ஆம் தேதி வெளியிட்டார்.

எனினும் மறுநாளில் (மார்ச் 5) அவரை கைது செய்த போலீஸார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவத்தின் பின்னணியில் அ.தி.மு.க.-வின் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர் என்று எதிர்க்கட்சியினர் போராட்டத்தில்ஈடுபட்டனர்.

”தமிழ்நாடே குலை நடுங்கும் வகையில் இளம்பெண்களை சீரழிக்கும் மிக மோசமான ஒரு கலாசாரத்திற்கு ஆளுங்கட்சியானஅ.தி.மு.க. துணை போவது கடும் கண்டனத்திற்குரியது,” என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மார்ச் 11 வெளியிட்டஅறிக்கையில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சங்கடங்களை தவிர்க்கும் வகையில், ’பார்’ நாகராஜைகட்சியிலிருந்து நீக்கி, அ.தி.மு.க. தலைமை உத்தரவிட்டுள்ளது.

இன்று வரை கல்லூரி மாணவர்களும் பொது மக்களும் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள எல்லா நபர்களையும் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *